பண்டாரகம: மஹிந்த - மைத்ரி அணி உறுப்பினர்கள் மோதல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 December 2018

பண்டாரகம: மஹிந்த - மைத்ரி அணி உறுப்பினர்கள் மோதல்!


பண்டாரகம பிரதேச சபையின் பெரமுன உறுப்பினர் அஜித் குமார செனவிரத்ன உறுப்பினர் மைத்ரி ஆதரவாளரான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிசாந்த சரத் குமாரவினால் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.காயப்பட்டதாக அஜித் குமார வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ள நிலையில் நிசாந்த சரத் தனது வழக்கறிஞர் ஊடாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தேசிய அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றும் பின்னணியில் மஹிந்த - மைத்ரி அணிகளுக்கிடையில் தற்சமயம் 'ஒற்றுமை' நிலவுகின்ற போதிலும் உள்ளூர் சர்ச்சைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment