தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் அரச நிகழ்வுகளுக்குத் தடை! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 December 2018

தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் அரச நிகழ்வுகளுக்குத் தடை!


நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லாது ஜனாதிபதியிடமே சர்வாதிகாரம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச நிகழ்வுகளுக்கு தனியார் நட்சத்திர ஹோட்டல்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் மைத்ரி.


ஜனவரியோடு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல நிதிப் பற்றாக்குறை நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுட்டிக்காட்டி வரும் நிலையில் செலவுகளைக் குறைக்க இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மைத்ரியின் வருகையை எதிர்த்து சுற்றுலாத்துறை விருது நிகழ்வைப் புறக்கணிக்கப்போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment