19ம் திருத்தச் சட்டத்தை 'திருத்த' முனையும் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 December 2018

19ம் திருத்தச் சட்டத்தை 'திருத்த' முனையும் மைத்ரி!


19ம் திருத்தச் சட்டத்தின் புரிதல் பாரிய சர்ச்சையாக உருவாகியுள்ள நிலையில் அதில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவுகளை மாற்றியமைக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.2015 தேர்தலின் முக்கிய வாக்குறுதி நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இருந்த அதேவேளை தனது பதவிக்காலத்தைக் குறைத்த முதலாவது இலங்கை ஜனாதிபதி நானே எனக் கூறிய மைத்ரி அப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே செயற்பட்டிருந்தார்.

எனினும், சர்வாதிகாரத்தை அவர் பிரயோகிக்க ஆரம்பித்ததிலிருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் ஈடுபாடு கொண்டவராகவும் அதனைத் தக்க வைக்க முயல்பவராகவும் மைத்ரி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment