நாட்டில் 'தற்காலிக' நம்பிக்கை மலர்ந்திருந்தது: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Saturday 15 December 2018

நாட்டில் 'தற்காலிக' நம்பிக்கை மலர்ந்திருந்தது: மஹிந்த!


ஒக்டோபர் 26ம் திகதி தான் பிரதமர் பதவியேற்றதும் நாட்டில் தற்காலிக நம்பிக்கை மலர்ந்து மக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தின் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவியதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


குறுகிய காலத்தில் நாட்டு மக்களுக்கு உருவாகிய நம்பிக்கை தகர்ந்துவிட்டதாக இருப்பினும் தேர்தலை நடாத்தும் வரையான இடைக்கால அரசையே பொறுப்பேற்றதெனும் ரீதியில் தான் இது பற்றி அலட்டிக் கொள்ளவில்லையெனவும் விரைவில் மக்கள் சக்தியை ஒன்றிணைத்து அந்த நம்பிக்கையைத் தான் காப்பாற்றப் போவதாகவும் மஹிந்த தனது 'பதவி விலகல்' உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக இயங்க நீதிமன்றம் தடை விதித்திருந்த அதேவேளை உச்ச நீதிமன்றம் அதனை நீக்க மறுத்திருந்த நிலையில் ஜனாதிபதியின் நாடளுமன்ற கலைப்பும் சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மஹிந்த தற்போது தனக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத பதவியை விட்டு விலகியுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment