ரணிலை பிரதமராக்க முடியாது: மைத்ரி அடம்! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

ரணிலை பிரதமராக்க முடியாது: மைத்ரி அடம்!


மைத்ரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ம் திகதி மேற்கொண்ட பிரதமர் நியமனம் மற்றும் அமைச்சரவை நியமனம் இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க மறுதலித்துள்ளார் ஜனாதிபதி.பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி - மைத்ரிபால சந்திப்பு ஈற்றில் ரணிலை பிரதமராக்க முடியாது எனும் மைத்ரிபாலவின் நிலைப்பாட்டோடு முடிவுற்றுள்ளது.

ரணிலையோ சரத் பொன்சேகாவையோ தன்னால் பிரதமராக நியமிக்க முடியாது என மைத்ரி தெரிவித்திருந்த அதேவேளை, நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சியினால் முன்மொழியப்படுபவரை பிரதமராக்குவது ஜனாதிபதியின் கடமையென முன்னதாக அஜித் பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment