விசாரணைகள் முடிவு: தீர்ப்புக்கான தேதி இதுவரை இல்லை! - sonakar.com

Post Top Ad

Friday, 7 December 2018

விசாரணைகள் முடிவு: தீர்ப்புக்கான தேதி இதுவரை இல்லை!


மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 13 அடிப்படை உரிமைகள் வழக்குகளின் விசாரணைகள் இன்று முடிவுற்றுள்ளன.குறித்த வழக்கினை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு சட்டரீதியான அதிகாரமில்லையென சட்டமா அதிபர் தெரிவித்திருந்த அதேவேளை, ஜனாதிபதி மக்களின் கேள்விகளுக்கு நீதிமன்றம் ஊடாக பதில் சொல்லும் கட்டாயம் உள்ளதாக வழக்குத் தொடுநர்கள் சார்பில் வாதிடப்பட்டிருந்தது.

இன்று மாலை 7 மணியளவில் அனைத்து தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிமன்றம் தீர்ப்புக்கான தேதியை அறிவிக்கவில்லையெனினும், பெரும்பாலும் எதிர்வரும் திங்கள் (10) இது குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment