கோட்டை - கொட்டாவ வரை இலத்திரனியல் ரயில் பாதை - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

கோட்டை - கொட்டாவ வரை இலத்திரனியல் ரயில் பாதைதூண்கள் மீது பயணிக்கும் முதலாவது இலத்திரனியல் ரயில் பாதை,  கொழும்பு – கோட்டையிலிருந்து, கொட்டாவ வரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக,  ரயில்வேத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. 

களனிவௌி ரயில் பாதை  அமைந்துள்ள பகுதியினூடாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த இலத்திரனியல் ரயில் பாதைத்  திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் 2022 ஆம் ஆண்டு  பூர்த்தியாகவுள்ளன.

இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால்,  ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாதைகளைக்  கொண்ட ரயில் பாதையின் ஐந்து  நிமிடங்களுக்கு ஒரு தடவை ரயில்கள் பயணிக்கவுள்ளன.

முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக,  குறித்த பகுதியில் உள்ள ஆயிரம்  குடும்பங்கள் அகற்றப்பட்டு மாற்றிடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன. இந்த இலத்திரனியல் ரயில் பாதையின் இரண்டாம் கட்டம்,  கொட்டாவையிலிருந்து பாதுக்க வரையிலும்,  மூன்றாம் கட்டம் பாதுக்கையிலிருந்து அவிசாவளை வரையிலும்  முன்னெடுக்கப்படவுள்ளதாக, ரயில்வே முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

ரயில் பயணிகளில் பத்து  வீதமானோர்,  இந்த ரயில் பாதையைப்  பயன்படுத்துகின்றனர். இலத்திரனியல் ரயில் நிறுவப்பட்டதன் பின்னர், குறித்த பாதையின் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுவதாக, ரயில்வே முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment