பசில் ராஜபக்ச தடுத்தும் மஹிந்த கேட்கவில்லை: பெரமுன - sonakar.com

Post Top Ad

Saturday, 15 December 2018

பசில் ராஜபக்ச தடுத்தும் மஹிந்த கேட்கவில்லை: பெரமுன


கடந்த ஒக்டோபரில் மைத்ரிபாலவின் பிரளயத்துடன் அரசைப் பொறுப்பேற்க வேண்டாம் என பசில் ராஜபக்ச தடுத்தும் மஹிந்த ராஜபக்ச அதற்கு செவி சாய்க்கவில்லையென பெரமுன சிரேஷ்ட உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.ஒக்டோபர் இறுதியில் லங்காதீப பத்திரிகையுடனான நேர்காணலின் போதும் பசில் ராஜபக்ச இதனைத் தெளிவுபடுத்தியிருந்ததாகவும் எனினும் மஹிந்தவை சுற்றியிருந்த ஆலோசகர்கள் அவரை இவ்வாறு ஒரு தேவையற்ற அவமானத்தை நோக்கி இழுத்துச் சென்றதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது பற்றி இன்னும் அறிவிக்கவில்லையாயினும் கோத்தபாயரை முன்நிறுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment