சிக்கலில் மைத்ரி: நாட்டில் அரசாங்கம் 'இல்லை'! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

சிக்கலில் மைத்ரி: நாட்டில் அரசாங்கம் 'இல்லை'!


ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உருவாக்கிய அரசியல் சிக்கல் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்சமயம் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை உருவாகியுள்ளது.ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கி, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய மைத்ரி, அவரது தலைமையின் கீழான அமைச்சரவையொன்றையும் நியமித்திருந்தார். மஹிந்தவுக்கும் அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போதிலும் மஹிந்த அரசு இயங்கி வந்த நிலையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சர்ச்சை பிரதமருக்கும் அரசுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தற்சமயம் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத அதேவேளை நாளை மறுதினம் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குகளும் விசாரணைக்கு வரவுள்ளன. நாடாளுமன்றைக் கலைப்பதற்கு உத்தரவிட்ட வர்த்தமானியை மைத்ரி இரத்துச் செய்தாலன்றி குறித்த வழக்குகளும் பெரும்பாலும் அவருக்கு எதிராகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மைத்ரிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment