முதலில் இடைக்கால பட்ஜட்; ஏப்ரலுக்குள் புதிய வரவு-செலவுத் திட்டம்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

முதலில் இடைக்கால பட்ஜட்; ஏப்ரலுக்குள் புதிய வரவு-செலவுத் திட்டம்: ஹர்ஷ


ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் முதலில் எதிர்வரும் வாரம் இடைக்கால பட்ஜட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அடுத்த சிங்கள - தமிழ் புத்தாண்டுக்குள் வரவு-செலவுத் திட்டம் முன் வைக்கப்படும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார் ஹர்ஷ டி சில்வா.



இடைக்கால பட்ஜட் ஊடாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையான பொது சேவை ஊழியர்களின் ஊதியம் மற்றும் இதர செலவுகள் மற்றும் கடனடைப்பு நடவடிக்கைகள் தொடரும் என ஹர்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவை பற்றி இதுவரை ஜனாதிபதி - பிரதமரிடையே பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லையென ஐ.தே.கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment