நான் 'அப்பாவி' யென்பதால் தான் என்னை மிரட்டுகிறார்கள்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

நான் 'அப்பாவி' யென்பதால் தான் என்னை மிரட்டுகிறார்கள்: மைத்ரி!


கடாபி கொல்லப்பட்டது போன்ற நிலை தனக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்லும் அளவுக்கு தான் ஒரு அப்பாவி என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.1976ம் ஆண்டிலிருந்து தான் ஐந்து தடவைகள் தப்பிப் பிழைத்தவனாயினும் கூட இதற்கு முன்னிருந்த ஜனாதிபதிகள் போன்று உறுதியான எதிராளியில்லையென்பதால் தன்னை மிரட்டுவதாகவும் ஜே.ஆருக்கோ பிரேமதாசவுக்கோ இவ்வாறு சொல்லி விட்டு, சொன்னவர்கள் வீடுகளில் இருந்திருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தான் ஒரு அப்பாவி என்பதால் தன்னைக் குறி வைத்து இவ்வாறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் தான் சாதுவான போக்குடையவனாக இருப்பதனால் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என ஐ.தே.கட்சியினர் நம்புவதாகவும், அப்படியே தன்னைக் கொல்ல வந்தாலும் தான் வழி விடக்கூடியவனே தவிர எதிர்த்துப் போராடப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment