திட்டமிட்ட அபிவிருத்தியெல்லாம் தடைப்பட்டு விட்டது: நாமல் கவலை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

திட்டமிட்ட அபிவிருத்தியெல்லாம் தடைப்பட்டு விட்டது: நாமல் கவலை!


ஐக்கிய தேசியக் கட்சி அரசு மூன்றரை வருடங்களாக செய்ய முடியாது போன ஒரே மாதத்தில் மக்களுக்கு சலுகைகளையும் நிவாரணங்களையம் தமது தந்தையின் கீழான அரசு வழங்கியதாகவும் அதற்குள் நீதிமன்ற தடை வந்து அனைத்தும் தடுக்கப்பட்டு விட்டதாகவும் கவலை வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.நாட்டை மீட்டு அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பாரிய திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கும் அவர், இடைக்கால உத்தரவினால் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, நிவாரணங்கள் சாதாரணமானவை எனவும் தமது அரசு கட்டியெழுப்பிய பொருளாதாரத்தை ஒரே மாதத்தில் மஹிந்த வந்து நாசமாக்கி விட்டதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment