கட்சி மாறிய மூவருக்கும் பதவியில்லை: தயாசிறி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 December 2018

கட்சி மாறிய மூவருக்கும் பதவியில்லை: தயாசிறி!
இன்று ஆளுங்கட்சிக்குத் தாவிய மூன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாக தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.


மஹிந்த ராஜபக்சவை சூழ்ந்துள்ள நரிகளுடன் இனியும் பணியாற்ற முடியாது என தன்நிலை விளக்கமளித்திருந்த விஜித் விஜேமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் இன்று ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கட்சி தாவியவர்களுக்கு பதவி கிடைக்காது என தற்போது தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment