ரணிலை உடனடியாக பிரதமராக்குங்கள்: சஜித் கோரிக்கை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 December 2018

ரணிலை உடனடியாக பிரதமராக்குங்கள்: சஜித் கோரிக்கை!


நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு, ஸ்திரமான அரசைக் கட்டியெழுப்ப, நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ள தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பிரதமராக நியமிக்கும்படி ஜனாதிபதியை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.ஒக்டோபர் 26 முதல் நிலவி வரும் சூழ்நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பேண சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் இன்று தனதுரையின் போது பாராட்டிய சஜித், புதிய அபிவிருத்தி யுகத்தை நாட்டை வழி நடாத்தும் நேரம் இதுவென தெரிவிக்கிறார்.

இதேவேளை, நாட்டின் நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமையும் ரணில் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment