சு.க தலைமைத்துவத்தை மாற்றுவதில் சந்திரிக்கா மும்முரம் - sonakar.com

Post Top Ad

Sunday, 2 December 2018

சு.க தலைமைத்துவத்தை மாற்றுவதில் சந்திரிக்கா மும்முரம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுள் பலர் மஹிந்த ராஜபக்கசவின் பெரமுன உறுப்பினர்களாக அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் கட்சியினைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தற்போதைய கட்சித் தலைமையை மாற்றுவதற்கான செயற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்ரீலசுகட்சி மத்திய குழுவில் உள்ள பலர் சந்திரிக்காவின் கரங்களைப் பலப்படுத்த வாக்குறுதியளித்துள்ள நிலையில் ஆகக்குறைந்தது 14 சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்நிலையிலேயே, சு.க தலைமைத்துவத்தில் மாற்றம் வர வேண்டும் எனும்  நோக்கிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment