எந்த அடிப்படையில் நீங்கள் பிரதமர்? மஹிந்தவிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

எந்த அடிப்படையில் நீங்கள் பிரதமர்? மஹிந்தவிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்!


மஹிந்த ராஜபக்ச எந்த அடிப்படையில், அதிகாரத்தில் பிரதமர் பதவி வகிக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.


நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு, மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மைப் பலம் இல்லையென்பது நிரூபிக்கப்பட்டும் தொடர்ந்தும் அவர் பதவி விலக மறுத்து வரும் நிலையில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இடம்பெற்று வருகிறது.

ஏலவே மஹிந்த தரப்பு சட்டத்தரணிகள், நம்பிக்கையில்லா பிரேரணை முறையாக நடாத்தப்படவில்லையென தெரிவித்திருந்த  போதிலும், தொடர்ந்தும் அவர் அப்பதவியை வகிப்பதற்கான அதிகாரம் என்னவென்பதை விளக்க எதிர்த்தரப்புக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment