எந்தப் பிரேரணை வந்தாலும் ரணில் பிரதமராக மாட்டார்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

எந்தப் பிரேரணை வந்தாலும் ரணில் பிரதமராக மாட்டார்: கம்மன்பில


நாளை மறுதினம் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையெ உறுதிப்படுத்தும் பிரேரணையொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ள நிலையில் அவ்வாறு எந்தப் பிரேரணை வந்தாலும் ரணில் மீண்டும் பிரதமராக மாட்டார் என அடித்துக் கூறுகிறார் உதய கம்மன்பில.உச்ச நீதிமன்றின் அரசியலமைப்புக்கான சட்ட விளக்கத்தைப் பின்பற்றி, நாட்டின் நலன் கருதி தான் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக மைத்ரி நேற்று தெரிவித்துள்ள நிலையில் கம்மன்பில இவ்வாறு தெரிவிக்கிறார்.

உச்ச நீதிமன்றம் தலையிட்டுக் கூட பிரதமர் ஒருவரை புதிதாக நியமிக்க முடியாது எனவும் ஏலவே பிரதமர் ஒருவர் இருப்பதாகவும் அவருக்கு இடைக்காலத் தடை மாத்திரமே விதிக்கப்பட்டிருப்பதாகவும் கம்மன்பில தெரிவிக்கிறார். எனினும், நாடாளுமன்ற கலைப்பு சட்டரீதியாகத் தவறாகும் பட்சத்தில் நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலம் உள்ள அணியிடம் ஆட்சியமைக்கும் பொறுப்பும் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment