பிரதமர் ஒருவர் இல்லாதது அபாயகரமானது : உ. நீதிமன்றில் வாதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 14 December 2018

பிரதமர் ஒருவர் இல்லாதது அபாயகரமானது : உ. நீதிமன்றில் வாதம்!


நாட்டுக்கு பிரதமர் ஒருவர் இல்லாத அபாயத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றில் வாதிட்டுள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன.மஹிந்த ராஜபக்ச பிரதமராகத் தொழிற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இடம்பெற்று வருகிறது. அங்கு மஹிந்த தரப்பில் ஆஜரான நிலையிலேயே மாரப்பன இவ்வாறு வாதிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பிணக்குகள் இருப்பதாகவும் அவற்றையும் நீதிமன்றம் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதத்தின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment