உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மைத்ரிக்கு எதிராக வழக்கு? - sonakar.com

Post Top Ad

Thursday, 13 December 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மைத்ரிக்கு எதிராக வழக்கு?


அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய நாட்டின் முதற்பிரஜையான மைத்ரிபால சிறிசேன, அதனை மீறி சட்டவிரோதமாக செயற்பட்டிருக்கிறார் எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து சில சிவில் அமைப்புகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.மைத்ரிபால சிறிசேன அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்தாக இன்றைய தினம் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ள நிலையில், இது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment