யாருடைய அரசியல் திட்டத்துக்கும் பலியாக மாட்டேன்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Saturday, 8 December 2018

யாருடைய அரசியல் திட்டத்துக்கும் பலியாக மாட்டேன்: மைத்ரி


வேறு எந்தத் தரப்பினது அரசியல் திட்டத்துக்கும் தான் பலியாகப் போவதில்லையெனவும் தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதில் தெளிவுடனேயே இருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.சர்வதிகாரத்தைக் கையிலெடுத்து திடீர் பிரதமர் நீக்கம், அமைச்சரலை மாற்றம் என அரசியல் குழப்பங்களை உருவாக்கியுள்ள மைத்ரி, தொடர்ந்தும் தான் தெளிவுடனேயே இருப்பதாகவும் அரசியல் சட்டங்களுக்குட்பட்டே நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார்.

உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. திங்களன்று தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் மைத்ரி இவ்வாறு தெரிவிக்கின்றமையும் தமது அரசியல் தேவைக்கு ஏனைய கட்சிகள் ஒத்து வர வேண்டும் என எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment