19ஐ திருத்த இடமளிக்க மாட்டோம்: UNP - sonakar.com

Post Top Ad

Saturday, 8 December 2018

19ஐ திருத்த இடமளிக்க மாட்டோம்: UNPநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு மக்கள் ஆணையைப் பெற்று, ஜனாதிபதி பதவியில் வீற்றிருக்கும் நிலையில் மக்கள் விருப்பத்துக்குப் புறம்பாக சர்வாதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள மைத்ரிபால சிறிசேன மேற்கொள்ளும் முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி எவ்விதத்திலும் இடமளிக்காது என தெரிவிக்கிறார் அஜித் பெரேரா.

19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் தனது அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதை சரிவரப் புரிந்து கொள்ளாத நிலையில் மைத்ரிபால மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது அரசாங்கம் முடங்கியுள்ளது.இந்நிலையில், அதற்கு மாற்றீடாக 19ம் திருத்தச் சட்டத்தைத் திருத்தப் போவதாக மைத்ரி தெரிவித்திருக்கிறார். இந்நிலையிலேயே அதனை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அவ்வாறு நடந்தால், மைத்ரிபால சிறிசேன தான் நினைத்த நேரத்தில் நாடாளுமன்றை கலைக்க முடியும் எனவும் பொலிஸ் உட்பட அனைத்து பொதுத்துறை ஊழியர்களையும் நினைத்த மட்டில் மாற்ற முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார் அஜித் பெரேரா.

No comments:

Post a Comment