மஹிந்த அமைச்சர்களுக்கான 'கொடுப்பனவுகள்' நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

மஹிந்த அமைச்சர்களுக்கான 'கொடுப்பனவுகள்' நிறுத்தம்


மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தவுடன் அவர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அரசியல் இழுபறி தொடருமானால் ஜனவரி முதல் பொது சேவை ஊழியர்கள் எவருக்குமே சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கான எரிபொருள் உட்பட அவர்களது பிரத்யேக ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்ற தீர்ப்பையடுத்து அது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்க 12ம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment