நீதிமன்ற தலையீடே தீர்வைத் தர முடியாமைக்குக் காரணம்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 December 2018

நீதிமன்ற தலையீடே தீர்வைத் தர முடியாமைக்குக் காரணம்: மைத்ரி


7 நாட்களுக்குள் நாட்டில் நிலவும் அரசியல் சர்ச்சைக்கு தீர்வைத் தரப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் இவ்விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தன்னால் தீர்வைத் தர முடியாத சூழ்நிலையென தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.


7 நாள் வாக்குறுதியளிக்கப்பட்ட போதே இவ்விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு இருந்த போதிலும் தான் ஒரு வாரத்தில் தீர்வளிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் நிறைவேற்று அதிகாரத்தைத் தொடர்ந்தும் அவர் தவறான முறையில் விளங்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment