ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 December 2018

ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு!ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதன் அடிப்படையிலான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை சபையில் சமர்ப்பித்து தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச, நாடு இன்று அதாள பாதாளத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் மீனவர்களும் வாழ்வாதாரமின்றித் தவிப்பதாகவும் தெரிவிக்கிறார்.தமது அரசு கட்டியெழுப்பிய பொருளாதாரம் சிதைக்கப்பட்டுள்ள அதேவேளை கம்உதாவ, கம்பெரலிய போன்ற மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவுள்ள ரணிலை மீண்டும் பிரதமராக்கி அரசை மீள நிறுவ ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திடீரென மேற்கொண்ட பிரதமர் மாற்றத்தின் பின்னணியில் அரசியல் சர்ச்சைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment