புதன்கிழமைக்குள் வழிக்கு வராவிட்டால் 'புரட்சி': சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

புதன்கிழமைக்குள் வழிக்கு வராவிட்டால் 'புரட்சி': சம்பிக்க!


புதன்கிழமைக்குள் நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ள தமது தரப்பிடம் அரசாங்கத்தை ஒப்படைக்காவிடின் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.மைத்ரியின் திடீர் அரசுக்கும் பிரதமருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியுடனான சந்திப்பும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

நாடாளுமன்ற பெரும்பான்மை தம் பக்கமே இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் மறுதலிக்கப்படுவதை கடிந்து கொண்டுள்ள சம்பிக்க, புதன் கிழமைக்குள் அரசாங்கம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment