பொல்கஹவெல: மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 24 December 2018

பொல்கஹவெல: மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு


நாங்கள் அரசியலுக்கு வந்து நாம் விரோதிகளைச் சம்பாதிக்கக் கூடாது. தேர்தலில் தோல்வி அடைவதும் வெற்றியடைவதும் இயல்பானதாகும்.  கிராமித்தில் வாழும் மக்கள் இந்த அரசியலை வைத்து  குரோதங்களை மனதில் வளர்த்துக் கொண்டு தம் உள்ளத்தைப் பாழடையச் செய்யக் கூடாது. எக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். எ;ன்று முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான எஸ். சஹாப்தீன் தெரிவித்தார்.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான எஸ். சஹாப்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொல்கஹவெலப் பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவம் பொல்கஹவெல் பந்தாவ அல் இர்பான் மத்திய கல்லூரி மண்டபத்தில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் முஹமட் கியாஸ் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொண்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான எஸ். சஹாப்தீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்


அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், உண்மையிலேயே அரசியல்வாதிகள்  அநேகமானவர்கள்  ஏதோ ஒரு நோக்கத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் கலிமாச் சொன்ன ஒருவர் அரசியல் செய்வதாக இருந்தால் அதற்கு முன்னால் அரசியல் என்றால் என்ன ? அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். வெளியில் இருக்கின்ற  சொத்தை ஒரு சிறு துளிவு கூட எடுக்கக் கூடாது. தொடக் கூடாது.  இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செய்தென்றால் மிகவும் தூய்மையானதாகவும்  மிகந்த  பக்குவத்துடனும் செய்ய வேண்டும். 

அரசியல் நோக்கத்திற்காக நான்  சமூகப் பணிகளை மேற்கொள்ள வில்லை. நான் அல்லாஹ்வின் திருப்பொருந்தத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையலேயே இந்த சிறார்களுக்கு என்னுடைய சொந்த நிதியில் இருந்து  கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றேன். 

ஒவ்வொரு மனிதனும் மரணத்தை விசுவாசித்து நடப்பானாயின் தவறு செய்ய முற்பட மாட்டான். அதற்கு முன்னால் எம்மிடம் இருக்கின்ற நட்பு உறவுகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினர்களுக்கு ஏதாவது செய்தால் தான் மரணத்திற்குப் பின்னால் அவர்கள் எங்களுக்காக ஒரு துஆப் பிரார்த்தனை செய்வார்கள். 

மனிதன் பிறப்பது என்பது  ஒரு சம்பவம் தான். ஆனால் அந்த மனிதன் இறக்கும் பொழுது  ஒரு சரித்திரமாக இருத்தல் வேண்டும். என்று முன்னாள் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் ஒரு நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.  ஒரு பிறந்து வளர்ந்து கல்வி மானாக வளர்ச்சியடைந்து  அரசியல்வாதியாகவோ, அல்லது பொறியியலாளர் அல்லது வைத்தியராகவோ  வந்து சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும். பின்னர் அவர் இறந்த பின்பு அவருடைய பெயர்  உச்சரிக்கப்பட வேண்டும். அவற்றைத்தான் எமது மாணவர் சமூகம் செய்ய முன்வர வேண்டும.

அவ்வாறு பேசப்படுபவர்கள் தான் அறிஞர் சித்திலெப்பை, டி. பி. ஜயா, செர் ராசிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத்,  எம். எச். எம். அஷ்ரப் போன்றவர்களை நாங்கள் இன்று கூட நினைத்துப் பேசுகின்றோம். அவர்கள் சமூகத்திற்காக எத்தனையோ பணிகள் செய்து இருக்கின்றார்கள். அதே போன்று வெறுமனே கல்வியை மட்டும் மாத்திரம் பெற்று விட்டு தம் குடுமபத்திற்கு மாத்திரம் செய்து விட வேண்டும் என்று நினைப்பதை விட  பொது நல எண்ணங்கள் அவர்களுடைய மனதில் வர வேண்டும். அவ்வாறு  பொது நல எண்ணங்கள் இருந்தால் ஏனையவர்களுக்கு இயல்பாகவே சென்றடையும். அப்துல் கலாம் குறிப்பிடுகின்றார்கள் மாணவர்களுடைய வாழ்க்கையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் மூன்று நபர்களாவர்.  அதில் ஒன்று தாய், தந்தை, ஆசிரியர் ஆகிய மூவருமாவர்.  ஒரு மாணவனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களின் பிரத்தியே பௌத்த சமய ஆலோசகர் தம்பதெனிய சுபோத தேரர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலின முன்னி அமைப்பின் தலைவர்  பாருக் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி



No comments:

Post a Comment