நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு மேலுமொரு தேசிய அங்கீகாரம் - sonakar.com

Post Top Ad

Saturday, 8 December 2018

நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு மேலுமொரு தேசிய அங்கீகாரம்


சிறந்த ஆரோக்கிய வாழ்வு மையத்திற்கான தேசிய மட்ட போட்டியில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு 2 ஆவது இடம் கிடைத்திருப்பதானது நிந்தவூருக்கு மட்டுமல்லாது, முழு கிழக்கு மாகாணத்திற்கும் புகழ் சேர்க்கக்கூடிய விடயமாகும்.


நாடளாவிய ரீதியில் 250ற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் இப்போட்டிக்கு தெரிவாகி இருந்தாலும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு மையம் மிகச்சிறப்பாக இயங்கியமையினால் இவ்விருது கிடைத்தது மறுக்க முடியாத உண்மையாகும்.
இவ்வைத்தியசாலைக்காக இவ்வருடம் ஜனாதிபதி நீலப்பசுமை விருது கிடைத்திருந்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

மேலும் இவ்வெற்றியை நிந்தவூர் வைத்தியசாலை சுகித்து சுவீகரிக்க வழிசெய்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. Saheela Issatheen அவர்களுக்கும், வைத்தியர்களுக்கும்,வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிந்தவூர் லைவ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 
இவ்வைத்தியசாலைக்காக தன்னார்வலர் குழுவாக நிந்தவூர் லைவ் அமைப்பானது தெளிவூட்டல் காணொளிகளை தயாரித்து வழங்கியமையையும் நினைத்து எம்முடைய அமைப்பானது பெருமிதம் கொள்கிறது.

-எம்.எம்.மத்தீன்

No comments:

Post a Comment