மைத்ரி நீதிமன்றுக்கு பதில் சொல்லியாக வேண்டும்: சட்டத்தரணி வாதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 7 December 2018

மைத்ரி நீதிமன்றுக்கு பதில் சொல்லியாக வேண்டும்: சட்டத்தரணி வாதம்!


நிறைவேற்று அதிகார ஜனாதிபதியென்பவர் 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக நீதிமன்றம் ஊடாக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜொப்ரி அலகரத்னம் வாதிட்டுள்ளார்.


தமது அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது மக்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை நீதிமன்றம் ஊடாக கேள்வி கேட்க முடியும் எனவும் முன்னர் அடுத்த தடவை தேர்தலை எதிர்கொள்ளும் போதே ஜனாதிபதியானவர் பதில் சொல்வது வழக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் மைத்ரிபால சிறிசேனவின் செயற்பாடுகளை நீதிமன்றில் எப்போது வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளமையும் உச்ச நீதிமன்றுக்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment