எழுத்தில் ஒன்று பேச்சில் ஒன்று: மஹிந்த தரப்பு சட்டத்தரணிக்கு 'செக்'! - sonakar.com

Post Top Ad

Friday 7 December 2018

எழுத்தில் ஒன்று பேச்சில் ஒன்று: மஹிந்த தரப்பு சட்டத்தரணிக்கு 'செக்'!


தான் எழுதிய புத்தகத்தில் மிகத் தெளிவாக நான்கரை வருடங்களுக்கு முன்பாக நாடாளுமன்றைக் கலைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர ஆர். டி சில்வா, இன்று நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கில் அதனை நியாயப்பத்தி ஆஜராகியுள்ளமை வேடிக்கைக்யானது என இன்றைய தினம் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருநதது.



பிரிவினைவாதிகளின் உபாயங்களும் 13,16,17,19ம் திருத்தச் சட்டங்களும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருந்த நூலில் 19ம் திருத்தச்சட்டத்திற்கமைவாக நான்கரை வருடங்களுக்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட  முடியாது என அவர் முறையாக மொழியெர்த்துள்ளதாகவும் இருப்பினும் தற்போது ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க உத்தரவிட்டுள்ளமை சரியானது என வாதிட வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் முஹம்மத் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கு விசாரணைகள் முடிவுற்றுள்ள அதேவேளை தீர்ப்புக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லையென்பதும் 10ம் திகதி தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் தீர்ப்பு வழங்கப்படும் வரை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment