பதவியேற்பை ஒளிப்பதிவு செய்யவும் விடவில்லை: அகில! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

பதவியேற்பை ஒளிப்பதிவு செய்யவும் விடவில்லை: அகில!


ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை ஒளிப்பதிவு செய்யக் கூட அனுமதிக்காத நிலையில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரிய வசம்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்தாவது தடவையாக இன்று இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

எனினும் பதவிப்பிரமாண நிகழ்வை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யவோ ஒளிப்பதிவு செய்யவோ ஜனாதிபதி அனுமதி மறுத்திருந்த நிலையில் கணப்பொழுதில் பதவிப்பிரமாணம் நடைபெற்று முடிந்திருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி தொடர்ந்தும் இடையூறுகளை உருவாக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் அவதானம் வெளியிட்டு வருகின்றமையும் அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வொன்று சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment