ஞானசாரவும் முஸ்லிம் சமூகமும்: நடப்பது என்ன? உங்கள் கேள்விகளுக்கு பதில்! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 December 2018

ஞானசாரவும் முஸ்லிம் சமூகமும்: நடப்பது என்ன? உங்கள் கேள்விகளுக்கு பதில்!


2011 முதலான இனவாத கால கட்டத்தில் தீவிர முஸ்லிம் எதிர்ப்பாளராக இருந்த ஞானசார அண்மைக்காலமாக மனமாற்றம் கண்டுள்ளதாக நம்பப்படுகிறது. நேசக்கரம் நீட்டியுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் முகமாக ஞானசாரவுடனான அண்மைய சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இன்று உங்களுடன் நேரலையில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

சோனகர்.கொம் முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/ceylonmoors காணொளி நேரலையாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், உங்கள் கேள்விகளும் சேர்த்துக் கொள்ளப்படும். எமது முகநூல் பக்கத்தில் இணைந்து அங்குள்ள பின்னூட்டத்தில் முன் வைக்கப்படும் பயனுள்ள கேள்விகளுக்கு இன்றைய விருந்தினர்களிடமிருந்து விடைகளைப் பெற்றுத் தருவதாக இம்முயற்சி அமையவுள்ளது.

இலங்கை நேரம் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் உங்கள் கேள்விகளையும் இணைத்துக் கொள்ள எமது பக்கத்தோடு இணைந்திருங்கள். ஊடகவியலாளர் இர்பான் இக்பால் இந்நேரலையை தொகுத்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recorded video below:


No comments:

Post a Comment