கொலைத் திட்ட விசாரணை: வெளிநாட்டு உதவியை நாட முயற்சிக்கும் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 December 2018

கொலைத் திட்ட விசாரணை: வெளிநாட்டு உதவியை நாட முயற்சிக்கும் மைத்ரி!


தன் மீதான கொலைத் திட்ட விசாரணையை ஐக்கிய தேசியக் கட்சி அக்கறையுடன் மேற்கொள்ளவில்லையென குற்றஞ்சாட்டி வந்த ஜனாதிபதி கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியிருந்தார் ஜனாதிபதி.



நீதிமன்ற தலையீட்டின் பின் தற்போது மீண்டும் ஆட்சியதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைத்துள்ள போதிலும் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களை தன் வசமே வைத்துள்ள மைத்ரி, தன் மீதான கொலைத் திட்ட விசாரணையை ஸ்கொட்லான்ட் யார்டிடம் கையளிப்பதற்கு ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது.

பொலிஸ் உளவாளி நாமல் குமார வெளியிட்டிருந்த தகவலின் பின்னணியிலேயே மைத்ரி மற்றும் கோத்தாவை கொலை செய்ய, முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வா திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment