மஹிந்தவை பிரதமராக்கியது செல்லுமா? குழப்பத்தில் ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Thursday 13 December 2018

மஹிந்தவை பிரதமராக்கியது செல்லுமா? குழப்பத்தில் ஜனாதிபதி!


நாடாளுமன்றைக் கலைக்க உத்தரவிட்டது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகோபித்த தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் மஹிந்தவை பிரதமராக்கியது தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப்போகிறது என ஜனாதிபதி தரப்பு குழப்பமடைந்துள்ளது.

மஹிந்த பிரதமராக தொழிற்படுவதற்கே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தடை விதிக்கப்படவில்லையென மஹிந்த தரப்பு தெரிவித்து வருகிறது. எனினும், இன்றைய தீர்ப்பின் பிரகாரம் தற்போதைய நாடாளுமன்றம் தொடர்ந்தும் இயங்கியது சட்டபூர்வமானது எனும் அடிப்படையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் சட்டரீதியானவையாகும்.


இப்பின்னணியில் ஏலவே மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இரு தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கு ஆதரவளித்தும் அவர் மீது நம்பிக்கை வெளியிட்டும் 117 பேர் வாக்களித்தும் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை ஜனவரியிலேயே இடம்பெறவுள்ள அதேவேளை மஹிந்தவின் மேன்முறையீடு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், அதற்கு முன் எதையும் தீர்மானிக்க முடியாத குழப்ப நிலைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment