உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெள்ளி வரை தள்ளிப் போகலாம்! - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெள்ளி வரை தள்ளிப் போகலாம்!


நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான உச்ச நீதிமன்றின் தீர்ப்பு இன்று வெளியிடப்படாது எனும் நிலையில் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை வரை தள்ளிப் போகக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.புதன், வியாழன், வெள்ளி தினங்களுக்குள் தீர்ப்பு வெளியாகும் என சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த வெள்ளியுடன் விசாரணைகள் முடிவுற்றுள்ள போதிலும் இரு தரப்பு வாதங்களை கருத்திற் கொள்ளும் ஏழு நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பை வெளியிடவுள்ளமையும் அதுவரை மஹிந்த அரசு இயங்குவதற்கு தடை தொடரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment