தீர்ப்பு வரும் வரை இடைக்காலத் தடை தொடரும்! - sonakar.com

Post Top Ad

Friday, 7 December 2018

தீர்ப்பு வரும் வரை இடைக்காலத் தடை தொடரும்!


நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை குறித்த வழக்குகளின் விசாரணைகள் நிறைவுற்றுள்ள போதிலும் தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.


ஆதலால், தீர்ப்பு வெளியிடப்படும் வரை இடைக்காலத் தடை தொடரும் என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக இயங்குவதற்கு 12ம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளமையும் நாடாளுமன்ற கலைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பு பெரும்பாலும் 10ம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் பிந்தினால், அதுவரை நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான இடைக்காலத் தடை தொடரும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment