மேற்குலகம் எங்களுக்கு கற்பிக்கத் தேவையில்லை: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Saturday 1 December 2018

மேற்குலகம் எங்களுக்கு கற்பிக்கத் தேவையில்லை: மைத்ரி!


குறுகிய கால வரலாறே கொண்ட மேற்குலகு மனித உரிமைகள் பற்றி இலங்கைக்கு கற்றுத் தரத் தேவையில்லையென தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.



2014ல் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஒக்டோபர் 26ம் திகதி வரை மேற்குலகு சார்ந்தே ஆட்சி நடாத்திக்கொண்டிருந்த ஜனாதிபதி தற்போது சீன சார்பு மஹிந்த அணியுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இந்நிலையிலேயே 2500 வருடங்கள் வரலாறுள்ள இலங்கைக்கு மேற்குலகம் மனித உரிமைகள் பற்றி கற்பிக்கத் தேவையில்லையென 1818 ஊவா வெல்லஸ்ஸ கலவரத்தின் 200 வது வருட நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையை மீண்டும் அழிவுப் பாதைக்குள் தள்ளுவதற்கே மேற்குலகம் முயல்வதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment