ஸ்ரீலங்கன் மோசடி: ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 1 December 2018

ஸ்ரீலங்கன் மோசடி: ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு


ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரித்து வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் குறித்த ஆணைக்குழு 2019ம் வருடம் பெப்ரவரி 15ம் திகதி வரை செயற்படும் என ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

ரணில் - மைத்ரி கூட்டு நிலவிய காலத்தில் மத்திய வங்கி மோசடியை விசாரித்து வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் திரிபுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமையும் தற்போது மஹிந்த - மைத்ரி கூட்டு நிலவுகின்ற நிலையில் இவ்வாணைக்குழு இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment