தனது 100 நாள் ஆட்சியை தானே மீளாய்வு செய்த இம்ரான் கான்! - sonakar.com

Post Top Ad

Tuesday 11 December 2018

தனது 100 நாள் ஆட்சியை தானே மீளாய்வு செய்த இம்ரான் கான்!



பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்று தனது முதல் மூன்று மாத ஆட்சியைத் தனது தலைமையிலேயே அமைச்சர்களைக் கூட்டி மீளாய்வு செய்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான்.

இம்ரான் கானின் அமைச்சரவை இவ்வாறு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொரு முறை தமது அமைச்சுகளின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யும் எனவும் மக்கள் நலத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பின்னடைவு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



ஒவ்வொரு அமைச்சுக்கும் ஐந்து வருட கால செயற்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவை குறித்து தனித்தனியாக ஆராய்ந்து பிரதமர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றமையும் இலங்கையில் 100 நாளில் ஒரு தடவை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே மறு முறை நாடாளுமன்றம் கலைக்கப்படும் வகையில் திருத்தச் சட்டம் உருவாக்கியும் ஜனாதிபதி அதனைக் கலைக்க முயற்சித்து சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment