30 அமைச்சர்கள் போதும்: எரான் விசனம்! - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

30 அமைச்சர்கள் போதும்: எரான் விசனம்!


இலங்கை பொன்ற நாட்டுக்கு 30 அமைச்சர்கள் போதுமானது என விசனம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் எரான் விக்ரமரத்ன.


ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்ட பின் கலைந்து போயிருந்த ஸ்ரீலசுக - ஐ.தே.க உறவைத் தற்போது மீண்டும் பதவிகள் அடிப்படையில் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எனினும், நாடாளுமன்றில் ஜனநாயக போராட்டத்தின் போது சு.க மற்றும் ஐமசுகூட்டமைப்பு உறுப்பினர்கள் மஹிந்த தரப்புக்கே ஆதரவளித்திருந்தனர்.

இந்நிலையில், அரச வளங்களை விரயப்படுத்தாது மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து 30 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என எரான் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment