நான் 10 தடவை; கரு14 தடவை நிராகரித்தோம்: சஜித்! - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

நான் 10 தடவை; கரு14 தடவை நிராகரித்தோம்: சஜித்!தனக்கு 10 தடவைகளும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு 14 தடவைகளும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் தாம் இருவரும் அதனை நிராகரித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.


கடந்த 50 நாள் அரசியல் பரபரப்பின் போது கட்சிக்குள் தான் இழந்திருந்த இடத்தை சாதுர்யமாக மீளக் கைப்பற்றியுள்ள சஜித் பிரேமதாச, தற்போது கட்சி நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மைத்ரிபால சிறிசேன ரணிலை நீக்க முன்பதாக சஜித் மற்றும் கருவுக்கு பிரதமர் பதவியை வழங்க தீவிர முயற்சி செய்துள்ளமை பற்றியே சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவாமலிருப்பதற்கு முன்னோடியாக இருந்த ரங்கே பண்டாரவுக்கு ஹரின் பெர்னான்டோ தனதுரையின் போது நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment