ரணிலின் புதிய அரசியல் கட்சி 'தேசிய ஜனநாயக முன்னணி' - sonakar.com

Post Top Ad

Monday, 17 December 2018

ரணிலின் புதிய அரசியல் கட்சி 'தேசிய ஜனநாயக முன்னணி'


தேசிய ஜனநாயக முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியொன்றைப் பதிவு செய்து அதனூடாக பாரிய கூட்டணியமைத்து எதிர்வரும் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெற்றிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இத்தகவலை வெளியிட்ட அவர், மேற்கூறிய பெயரிலான புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதற்கு ஏற்ப மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் தர வேண்டும் எனவும் அவர் தனதுரையின் போது வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment