நாளை கொழும்பில் UNPன் ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

நாளை கொழும்பில் UNPன் ஆர்ப்பாட்டம்!


மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக அரசை மீள நிறுவக் கோரி நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினர் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



நாடாளுமன்ற பெரும்பான்மையை எழுத்து மூலம் நிரூபித்துள்ள நிலையில் ஜனாதிபதி தரப்பு இன்னும் பதில் தரவில்லையென்பதால் அதனை வலியுறுத்தி நாளைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

லிப்டன் சந்தியில் இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில விராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment