கரு சம்பிரதாயங்களை மீறி விட்டார்: மைத்ரி பதில் கடிதம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

கரு சம்பிரதாயங்களை மீறி விட்டார்: மைத்ரி பதில் கடிதம்!


நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கரு ஜயசூரிய நடந்து கொண்டுள்ளதாகவும் தான் ஏலவே எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையெனவும் பதில் அளித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரின் கையொப்பத்துடன் தமக்கு அனுப்பப்பட்ட கடிதமும் உத்தியோகபூர்வ ரீதியில் உறுதிப்படுத்தப்படாத ஒன்று எனவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எனும் அடிப்படையில் தனக்கே முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது எனவும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் மைத்ரி மேலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சபாநாயகர் சம்பிரதாயங்களை மீறி நம்பிக்கையில்லா பிரேரணையை அனுமதித்துள்ளதாகவம் அவரது நடவடிக்கைகள் தமக்கு கவலையளிப்பதாகவும் மைத்ரி மேலும் தெரிவித்துள்ள நிலையில் அரசியல் சர்ச்சை மேலும் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment