கரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

கரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை!


நாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை உருவாகும் என தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.



அரசியல் சூழ்நிலை இவ்வாறே தொடரும் பட்சத்தில் சபாநாயகர் உச்ச நீதிமன்றிடம் இது பற்றி முறையிட்டு ஆலோசனை பெற முடியும் எனவும், நாட்டில் அரசாங்கம் வீழ்ச்சியடைந்திருப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில் சபாநாயகரே ஜனாதிபதியின் பொறுப்பையும் ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான அனுமதி அரசியல் சட்டத்தில் இடமிருப்பதாகவும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் இல்லாத நிலையில் சபாநாயகராகப் பணியாற்றிய பாக்கீர் மார்க்கார் அக்கால கட்டத்தில் தற்காலிகமாக நாட்டின் தலைவராக பணியாற்றியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

1 comment:

Sampath Karunarathne said...

All these depict the nudity of the opposition

Post a Comment