அமைச்சுப் பொறுப்பை கை விட்டு UNPயுடன் இணைந்த வசந்த! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

அமைச்சுப் பொறுப்பை கை விட்டு UNPயுடன் இணைந்த வசந்த!


தனக்களிக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பை விட்டு இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார் வசந்த சேனாநாயக்க.தான் ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லையெனவும் மஹிந்த தரப்புக்கு பெரும்பான்மையிருப்பதாக நம்பியே தான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதாகவம் தெரிவித்துள்ள அவர், இன்று அது நிரூபிக்கப்படாத நிலையில் தான் அப்பதவியைக் கை விடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எனவும் எந்த அரசு வந்தாலும் தமது மக்களுக்காக இணைந்து பணியாற்றத் தயார் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment