ஐக்கிய தேசியக் கட்சி அரசு மீள நிறுவப்பட்டு விட்டது: சஜித்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

ஐக்கிய தேசியக் கட்சி அரசு மீள நிறுவப்பட்டு விட்டது: சஜித்!


நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை தோற்கடிக்கப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசு மீள நிறுவப்பட்டு விட்டதாக ஆணித்தரமாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.


பெருந்தொகை வெளிநாட்டு ஊடகங்கள், தூதரக அதிகாரிகள் பிரசன்னத்தில் இன்று நாடாளுமன்றம் கூடியிருந்த நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடாத்த விடாது கூட்டு எதிர்க்கட்சியினர் தடுக்க முனைந்திருந்தனர்.

இந்நிலையில், இலத்திரனியல் வாக்கெடுப்புக்கு எதிராக வாய் மூல வாக்கெடுப்பு நடாத்தப்படடிருந்த நிலையில் பிரேரணையை ஆதரித்து பெருமளவில் குரல் எழுப்பப்பட்டிருந்தமையும் எதிர்ப்பில்லாத நிலையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் சஜித் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment