நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம்: UNP - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம்: UNPநாளைய தினம் மீண்டும் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கும் என அக்கட்சி தெரிவிக்கிறது.

இன்றைய அனைத்து கட்சி சந்திப்பு எந்த முடிவும் இல்லாமலே முடிவுற்றுள்ளமை கவலையளிப்பதாக தெரிவிக்கின்ற அதேவேளை தமது தரப்பு நாளை மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்கும் என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.பெயர் மூலம் அல்லது இலத்திரனியல் மூலமான நம்பிக்கையில்லா பிரேரணையையே தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக ஜனாதிபதி தெரிவிக்கின்ற அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நடாத்த 12 அம்ச செயற்பாடு உள்ளதாக மஹிந்த தரப்பு தெரிவிக்கிறது.

எனினும், நாளை மீண்டும் தாம் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment