அமைச்சுப் பதவியைத் துறந்து UNPல் மீண்டும் இணைந்த வடிவேல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

அமைச்சுப் பதவியைத் துறந்து UNPல் மீண்டும் இணைந்த வடிவேல்!


தான் ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் சென்றதில்லையென தெரிவிக்கின்ற வடிவேல் சுரேஷ், தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.


வசந்த சேனாநாயக்க, பௌசி, பியசேன கமகே, மனுஷ நானாயக்கார போன்றோர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவிய அதேவேளை, மஹிந்த அணி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியிருந்தது.

சபை நடவடிக்கைகளும் கூட்டு எதிர்க்கட்சியினரால் குழப்பப்பட்டிருந்த நிலையில் வாய் மூல வாக்கெடுப்பின் ஊடாக மஹிந்த ராஜபக்ச மற்றும் புதிய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment