அரசியல் 'சூழ்ச்சி' தோற்கடிக்கப்பட்டு விட்டது: அநுர! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

அரசியல் 'சூழ்ச்சி' தோற்கடிக்கப்பட்டு விட்டது: அநுர!


ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை சூழ்ச்சியினூடாக தோற்கடிக்க முனைந்த சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


மைத்ரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ச இணைந்து உருவாக்கிய அரசியல் சூழ்ச்சி நாடாளுமன்றை சட்ட விரோதமாக கலைக்க முயன்று தோல்வி கண்டுள்ளதாகவும் பெரும்பான்மைப் பலம் இல்லாத தந்திரக்காரர்கள் இன்று விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் அநுர மேலும் தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தினை அறியாத அளவுக்கு மஹிந்தவோ மைத்ரியோ சிறுபிள்ளைகள் இல்லையெனினும் அதன் ஓட்டைகளைப் பயன்படுத்தி பின் கதவால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கப்பட்டதாகவும் எனினும் சூழ்ச்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment