
ஒக்டோபர் இறுதி வாரம் முதல் நிலவிய அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்சவின் நியமனம் மற்றும் புதிய அமைச்சரவை 122 பேர் கொண்ட பெரும்பான்மையினால் நாடாளுமன்றில் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், மஹிந்த ராஜபக்சவுக்கு அரசமைக்க இனியும் இடமில்லையென தெரிவித்துள்ளார்.
இதுவரை நிலவிய அரசியல் சூழ்நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஒக்டோபர் 26க்கு முன்னர் இயங்கிய அரசே தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை புதிய அரசு வேண்டுமானால் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிக்கலாம் எனவும் ரணில் விக்கிரமசிங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment